செந்தமிழ்சிற்பிகள்

தி.செல்வகேசவராயர் (1864-1921)

தி.செல்வகேசவராயர்

(1864-1921)

அறிமுகம் 

கே.செல்வகேசவராயர் இலக்கியம், திறனாய்வு, மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் அறிஞராகத் திகழ்ந்தார். தமிழ் தனித்தியங்கும் தன்மை உள்ள செம்மொழி என்பதனை நிறுவிய அறிஞர்களுள் ஒருவர் ஆவார். இவர் தமிழ்ப் பழமொழிகள் பலவற்றைத் தொகுத்து அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து இணைப் பழமொழிகள் என்னும் நூலை 1898-ஆம் ஆண்டில் வெளியிட்டார். பஞ்சலட்சணம் என்னும் தமிழ் இலக்கண நூலை 1903-ஆம் ஆண்டில் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் இயற்றி இருக்கிறார். பழமொழிகள் கலந்த கட்டுரைகள் எழுதித் தமிழ் உரைநடைக்கு ஆழமும் மெருகும் தந்தவர். பழமொழி நானூறு, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி உள்ளிட்ட நூல்களை பதிப்பித்துள்ளார். மேலும், கம்பநாடர், வியாசமஞ்சரி, கண்ணகி கதை உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்.